/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு பயண வழி உணவகம் இ.சி.ஆரில் அமைக்க எதிர்பார்ப்பு
/
அரசு பயண வழி உணவகம் இ.சி.ஆரில் அமைக்க எதிர்பார்ப்பு
அரசு பயண வழி உணவகம் இ.சி.ஆரில் அமைக்க எதிர்பார்ப்பு
அரசு பயண வழி உணவகம் இ.சி.ஆரில் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 11, 2025 10:48 PM

செய்யூர்:தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான விழுப்புரம், கடலுார், சிதம்பரம், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களை இணைக்கும் பிரதான சாலையாக, இ.சி.ஆர்., எனும், கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளது.
இந்த கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக தினமும் இருசக்கர வாகனங்கள், கார், பேருந்து என, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணியரின் பயன்பாட்டிற்காக, சென்னையில் இருந்து 90 கி.மீ., தொலைவில் செய்யூர் பகுதியில் பரமன்கேனி மற்றும் கெங்கதேவன்குப்பத்தில், ஒப்பந்த அடிப்படையில் தனியார் பயண வழி உணவகங்கள் உள்ளன.
இந்த உணவகத்தில், தினமும் நுாற்றுக்கணக்கான அரசு பேருந்துகள் நின்று, பயணியர் உணவருந்தியதும் செல்கின்றன.
தற்போது கிழக்கு கடற்கரைச் சாலை நான்குவழிச் சாலையாக மாற்றப்பட்டு வரும் நிலையில், சாலையில் கூடுதலாக பேருந்துகள் செல்ல வாய்ப்பு உள்ளது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூரில் அரசு பயண வழி உணவகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதே போல, இ.சி.ஆரில், செய்யூர் பகுதியில் அரசு பயண வழி உணவகம் அமைத்தால், பேருந்து பயணியருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
எனவே, அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து, இ.சி.ஆரில், செய்யூர் பகுதியில் அரசு பயண வழி உணவகம் அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

