/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பகுதி நேர ரேஷன் கடை நெடுமரத்தில் எதிர்பார்ப்பு
/
பகுதி நேர ரேஷன் கடை நெடுமரத்தில் எதிர்பார்ப்பு
ADDED : அக் 06, 2024 08:39 PM
பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த நெடுமரம் ஊராட்சிக்குட்பட்ட காலனி பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். பல ஆண்டுகளாக, அங்கு நியாய விலைக் கடை இல்லை.
அதனால், காலனி பகுதியில் வசிக்கும், 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், 2 கி.மீ., தொலைவில், நெடுமரம் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில், அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.
தொலைவில் உள்ள நியாய விலை கடையில் வாங்கப்பட்ட பொருட்களை, 2 கி.மீ., சுமந்துகொண்டு வீட்டிற்கு செல்ல மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஆட்டோவில் ஏற்றிச் செல்ல, 40 முதல் 60 ரூபாய் வரை கேட்பதாக கூறப்படுகிறது. மேலும், நியாய விலை கடைக்கு வந்து செல்ல முதியவர்கள் மற்றும் பெண்கள் அவதிப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, நெடுமரம் காலனியில் பகுதி நேர நியாய விலை கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

