/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கந்தசுவாமி கோவிலில் திரண்ட பக்தர்கள்
/
கந்தசுவாமி கோவிலில் திரண்ட பக்தர்கள்
ADDED : பிப் 06, 2024 08:53 PM

திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவில் நகரங்களில் ஒன்றாக திருப்போரூர் கந்தசுவாமி கோவில் விளங்குகிறது. இங்கு, அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதமாக, மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில் நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி, கந்தசஷ்டி மற்றும் மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன.
செவ்வாய்க்கிழமை கந்தபெருமானுக்கு உகந்த நாள் என்பதால், நேற்று ஏராளமானோர் கோவிலில் திரண்டனர். நீண்ட வரிசையில் நின்று கந்தபெருமானை வழிபட்டனர்.
இதையடுத்து, ஊரணி பொங்கல் வைத்தல், மொட்டை அடித்தல் போன்ற நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தைக்கிருத்திகை, தைப்பூசத்தில் வர இயலாத பக்தர்களும் நேற்று வந்து வழிபட்டனர்.

