/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமடைந்த கான்கிரீட் சாலை மாம்பாக்கத்தில் மக்கள் அவதி
/
சேதமடைந்த கான்கிரீட் சாலை மாம்பாக்கத்தில் மக்கள் அவதி
சேதமடைந்த கான்கிரீட் சாலை மாம்பாக்கத்தில் மக்கள் அவதி
சேதமடைந்த கான்கிரீட் சாலை மாம்பாக்கத்தில் மக்கள் அவதி
ADDED : டிச 15, 2025 05:52 AM

சித்தாமூர்: மாம்பாக்கம் ஊராட்சியில், சேதமடைந்துள்ள கான்கிரீட் சாலையை சீரமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தாமூர் அருகே மாம்பாக்கம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட மாம்பாக்கம் காலனி பகுதியில், மாரியம்மன் கோவில் தெருவில் மக்கள் பயன்பாட்டிற்காக பல ஆண்டுகளுக்கு முன், கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.
முறையான பராமரிப்பு இல்லாமல், நாளடைவில் சாலை பழுதடைந்து உள்ளதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
சாலை நடுவே சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால், நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர்.மேலும், சாலை நடுவே உள்ள சிறுபாலம் சேதமடைந்து, பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
இதனால், இரவு நேரத்தில் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி, விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
சாலையை சீரமைக்க வேண்டும் என, மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என, கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மாம்பாக்கம் ஊராட்சியில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

