/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றத்தில் தொடரும் நெரிசல்; ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்போது?
/
திருக்கழுக்குன்றத்தில் தொடரும் நெரிசல்; ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்போது?
திருக்கழுக்குன்றத்தில் தொடரும் நெரிசல்; ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்போது?
திருக்கழுக்குன்றத்தில் தொடரும் நெரிசல்; ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்போது?
ADDED : மார் 11, 2024 10:53 PM

திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றத்தில் தாலுகா, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி, சார் - பதிவாளர் என, அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், வங்கிகள் உள்ளிட்டவை இயங்குகின்றன. இப்பகுதி போக்குவரத்தில் சதுரங்கப்பட்டினம் சாலை பிரதானமாக உள்ளது.
குறுகிய சாலையில் பெருகியுள்ள ஆக்கிரமிப்புகள், முக்கிய சந்திப்பு பகுதிகள் நெருக்கடி ஆகிய காரணங்களால், நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து முடங்குகிறது.
இச்சாலையில், குறுகிய தொலைவிற்குள், மாமல்லபுரம் சாலை, அடுத்து சன்னிதி தெரு, இறுதியில் கருங்குழி சாலை ஆகியவை இணைந்துள்ளன.
சதுரங்கப்பட்டினம் சாலை பகுதி, முக்கிய வர்த்தக பகுதியாகவும் உள்ள நிலையில், அதன் இருபுறமும் கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் சாலை குறுகியுள்ளது. சந்திப்பு பகுதிகளிலும், சாலை பகுதி அகலமின்றி, கடும் நெருக்கடியுடன்உள்ளது.
ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் கடக்கும் சூழலில், கட்டுப்பாடற்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வாகன ஓட்டுனர்கள், போக்குவரத்து விதிகளை அலட்சியப்படுத்தி, சாலைகள், சந்திப்புகள் குறுகியவை பற்றி கவனத்தில் கொள்வதில்லை.
வாகனத்தை வேகமாக ஓட்டி, முன்னால் செல்லும் வாகனத்தை முந்தி, சந்திப்பிலும், வளைவிலும் தான்தோன்றித்தனமாக திரும்பி, திடீரென குறுக்கில் கடந்து செல்கின்றனர்.
மாமல்லபுரம் சாலை சந்திப்பில், அரசு, தனியார் பேருந்துகள், நிலையம் செல்வதும் வெளியேறுவதும் சிக்கலாகிறது. மருத்துவ அவசர 108 ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும் சன்னிதி தெரு சந்திப்பில், வாகனங்கள் தேங்கி, அரசு மருத்துவமனை செல்வது தாமதமாகிறது. இதனால், மார்க்கெட் பகுதி வரை, போக்குவரத்து முடங்குகிறது.
இப்பாதிப்பை தவிர்க்க, நெடுஞ்சாலை, காவல் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர், சாலைகள், சந்திப்புகள் பகுதிகளை ஆய்வு செய்து, சாலை விரிவாக்கம், சாலைகளில் தடுப்புகள் அமைப்பது, ஒருவழிப் பாதை போக்குவரத்து உள்ளிட்ட நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

