/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தார்ப்பாய் மூடாத லாரிகளால் சாலையில் மண் உருண்டைகள்
/
தார்ப்பாய் மூடாத லாரிகளால் சாலையில் மண் உருண்டைகள்
தார்ப்பாய் மூடாத லாரிகளால் சாலையில் மண் உருண்டைகள்
தார்ப்பாய் மூடாத லாரிகளால் சாலையில் மண் உருண்டைகள்
ADDED : அக் 09, 2024 12:32 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த பெரியவிப்பேடு ஏரியிலிருந்து அள்ளப்படும் மண், லாரிகள் வாயிலாக நெம்மேலி கடல் நீர் குடிநீராக்கும் திட்ட பணிகள் மற்றும் கேளம்பாக்கம்- - தையூர் ஆறுவழிச்சாலை பணிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அவ்வாறு மண் கொண்டு செல்லும் லாரிகள், திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலை, ஓ.எம்.ஆர்., சாலை வழியாக செல்கிறது. பொதுவாக மண் லோடுடன் செல்லும் லாரிகளால், சாலையில் மண் குவியல் ஏற்பட்டு வருகிறது.
பல லாரிகள் தார்ப்பாய் போடாமல் செல்வதால், கரும்பாக்கம் அருகே லாரியிலிருந்து மண் உருண்டைகள் சரிந்து சாலையில் விழுகிறது.
இதனால், சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. சிறு சிறு விபத்துகளில் சிக்கி, வாகன ஓட்டிகள் காயமடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

