/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துருப்பிடித்து வீணாகும் கம்பிகள் கிடங்கு அமைக்க வேண்டுகோள்
/
துருப்பிடித்து வீணாகும் கம்பிகள் கிடங்கு அமைக்க வேண்டுகோள்
துருப்பிடித்து வீணாகும் கம்பிகள் கிடங்கு அமைக்க வேண்டுகோள்
துருப்பிடித்து வீணாகும் கம்பிகள் கிடங்கு அமைக்க வேண்டுகோள்
ADDED : பிப் 05, 2024 06:43 AM

பவுஞ்சூர், : லத்துார் ஒன்றியத்தில் 41 ஊராட்சிகள் உள்ளன. ஊரக வளர்ச்சித் துறை மூலமாக, ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் மற்றும் பசுமை வீடு, தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான இரும்பு கம்பிகள், பவுஞ்சூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளன.
வெயில் மற்றும் மழையில் நனைந்து, இரும்புக் கம்பிகள் துருப்பிடிக்கின்றன. எந்தவித பாதுகாப்பு வசதியும் இல்லாததால், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கம்பிகளை திருடிச் செல்ல வாய்ப்பு உள்ளது என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, இரும்பு கம்பிகளை பாதுகாப்பாக வைக்க, குடோன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.