/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆத்துார் பெரிய ஏரிக்கரையில் தார்ச்சாலை அமைக்க கோரிக்கை
/
ஆத்துார் பெரிய ஏரிக்கரையில் தார்ச்சாலை அமைக்க கோரிக்கை
ஆத்துார் பெரிய ஏரிக்கரையில் தார்ச்சாலை அமைக்க கோரிக்கை
ஆத்துார் பெரிய ஏரிக்கரையில் தார்ச்சாலை அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 19, 2024 05:04 AM

அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் பெரிய ஏரி வழியாக, சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் வீராணம் குடிநீர் குழாய் செல்கிறது. இந்த, குழாய் ஓரம் கப்பி சாலை அமைக்கப்பட்டது.
தற்போது முட்புதர்கள் அடர்ந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இந்த சாலை வழியாக, வெளியம்பாக்கம், சமத்துவபுரம், எடையாளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தொழுப்பேடு அரசு பள்ளிக்கு மாணவர்கள் வந்து செல்கின்றனர். மேலும், விவசாய கருவிகள் கொண்டு செல்ல தடையாக உள்ளது.
எனவே, சாலையை அடைத்து வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றி, புதிதாக தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.