/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'வெல்டிங்' பணியால் மரக்கிடங்கில் தீ ரூ.15 லட்சம் மரக்கட்டைகள் நாசம்
/
'வெல்டிங்' பணியால் மரக்கிடங்கில் தீ ரூ.15 லட்சம் மரக்கட்டைகள் நாசம்
'வெல்டிங்' பணியால் மரக்கிடங்கில் தீ ரூ.15 லட்சம் மரக்கட்டைகள் நாசம்
'வெல்டிங்' பணியால் மரக்கிடங்கில் தீ ரூ.15 லட்சம் மரக்கட்டைகள் நாசம்
ADDED : மார் 19, 2024 04:23 AM
சென்னை : சென்னை, கொருக்குப்பேட்டை, கருமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் ஜெகன். இவர், கொருக்குப்பேட்டை, கோபால் நகர், 6வது தெருவில், சொந்தமாக மரக்கிடங்கு வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணிக்கு, மரக் கிடங்கில் திடீரென தீ பற்றி, பொருட்கள் எரிய துவங்கின. இதனால், கரும்புகை எழுந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, பூக்கடை உள்ளிட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரண்டு மணி நேரம் போராடினர். ஆனால், தீ கட்டுக்கடங்காமல் அதிகரித்தது.
இதையடுத்து, கூடுதலாக மணலி, ராயபுரம், பெரம்பூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து ஆறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 50க்கும் அதிகமான வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். நான்கு மணி நேரத்திற்கு பின், நேற்று காலை 6:30 மணிக்கு, தீ முழுதும் அணைக்கப்பட்டது.
இது குறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையில், மரக்கிடங்கு அருகில் கட்டட பணி நடந்துள்ளது. அப்போது, கட்டட ஊழியர்கள் வெல்டிங் செய்து கொண்டிருந்தபோது, அதில் இருந்து வந்த தீப்பொறியால் மரத் துகள்களில் தீ பிடித்தது தெரிந்தது.
இதில் 15 லட்சம் ரூபாய் மதிப்புடைய 20 டன் மரக்கட்டைகள் தீயில் கருகி நாசமாகியுள்ளன.

