/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊராட்சி தலைவி கணவர் மீது மரத்தை வெட்டியதாக வழக்கு
/
ஊராட்சி தலைவி கணவர் மீது மரத்தை வெட்டியதாக வழக்கு
ADDED : பிப் 01, 2024 10:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே பருக்கல் கிராமத்தில், தனிநபருக்கு சொந்தமான மரங்களை வெட்டியதாக, ஊராட்சி தலைவியின் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அச்சிறுபாக்கம் அருகே பருக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 53. இவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்த பரங்களை, பருக்கல் ஊராட்சி தலைவி பிரபாவதியின் கணவர் சிவக்குமார் என்பவர், அனுமதியின்றி வெட்டி அகற்றியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராமலிங்கம், அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், சிவக்குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.

