/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமியை கடித்து குதறிய நாய் உரிமையாளர் மீது வழக்கு
/
சிறுமியை கடித்து குதறிய நாய் உரிமையாளர் மீது வழக்கு
சிறுமியை கடித்து குதறிய நாய் உரிமையாளர் மீது வழக்கு
சிறுமியை கடித்து குதறிய நாய் உரிமையாளர் மீது வழக்கு
ADDED : மார் 11, 2024 10:46 PM
சென்னை : சென்னை, கோயம்பேடு, நியூ காலனி ஒன்பதாவது தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார், 42. இவரது மகள் சஞ்சனா, 10. இவர், கோயம்பேடில் உள்ள தனியார் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமி நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்று, வீடு திரும்பியபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் பொன்னையன் என்பவரது வளர்ப்பு நாய் சஞ்சனாவை கடித்து குதறியது.
இதில், சிறுமியின் முழங்கை, இடது கால் மற்றும் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து விசாரிக்கும் கோயம்பேடு போலீசார், நாயின் உரிமையாளர் பொன்னையன், 49, என்பவர் மீது, அஜாக்கிரதையாக பிராணிகளை வளர்த்தல், காயம் ஏற்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.