/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆட்டோ ஓட்டுனர் கொலையில் 6 பேர் கைது
/
ஆட்டோ ஓட்டுனர் கொலையில் 6 பேர் கைது
ADDED : மார் 02, 2024 11:02 PM
குன்றத்துார்:குன்றத்துார் அருகே திருமுடிவாக்கம், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் நிஷாந்த், 23; ஆட்டோ ஓட்டுனர். இவர், அதே பகுதியில் கடந்த 28ம் தேதி இரவு, மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த அஜித், 24, இவரது தம்பி கவியரசு, 22, அண்ணன் தியாகராஜன், 26, ஆகியோர் முன்விரோதம் காரணமாக, தங்கள் நண்பர்களுடன் இணைந்து, நிஷாத்தை கொலை செய்தது தெரிய வந்தது.
மேலும், இவர்கள் மாமல்லபுரத்தில் பதுங்கியிருப்பதை அறிந்து, குன்றத்துார் போலீசார் மாமல்லபுரம் விரைந்தனர். போலீசார் வருவதை பார்த்த அஜித், கவியரசு உள்ளிட்ட ஆறு பேர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
போலீசார், சினிமா பட பாணியில் விரட்டி சென்று, ஆறு பேரையும் கைது செய்தனர்.
போலீசிடம் இருந்து தப்ப முயன்ற அஜித், கவியரசு உள்ளிட்ட நான்கு பேர், தவறி விழுந்ததில் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.

