/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நிறுத்தப்பட்ட பேருந்து இயக்கப்படுமா?
/
நிறுத்தப்பட்ட பேருந்து இயக்கப்படுமா?
ADDED : ஆக 16, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம் : மதுராந்தகத்தில் இருந்து மோச்சேரி வழியாக பாப்பநல்லுார் வரை, தடம் எண்: டி16 அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது.
பல ஆண்டுகளாக இயக்கப்பட்ட இந்த பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, அவ்வழியாக இயக்கப்பட்ட பேருந்து, அய்யனார் கோவில், மொறப்பாக்கம், கழினிப்பாக்கம் வழியாக, பாப்பநல்லுார் சென்று வருகிறது. அதனால், மோச்சேரி, புதுார், அருந்ததிபாளையம் போன்ற பகுதிகளைச் சேர்ந்தோர், மதுராந்தகம் டவுன் பகுதிக்கு செல்ல அவதிப்படுகின்றனர்.
எனவே, நிறுத்தப்பட்ட தடம் எண்: டி16 பேருந்தை, மீண்டும் மோச்சேரி வழியாக இயக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

