/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை புறவழிச்சாலையில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா?
/
செங்கை புறவழிச்சாலையில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா?
செங்கை புறவழிச்சாலையில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா?
செங்கை புறவழிச்சாலையில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா?
ADDED : ஏப் 24, 2024 08:46 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு புறவழிச்சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில், சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்கின்றன.
இதேபோன்று, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, கோவிலுக்கு செல்வோர் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இப்பகுதியில், பேருந்திற்காக நீண்டநேரம் பயணியர் காத்திருந்து பயணம் செய்கின்றனர். தற்போது, வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால், பயணியருக்கு குடிநீர் அவசியம். குடிநீர் வசதி இல்லாததால், பயணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதை தவிர்க்க, மேம்பாலம் பகுதியில், பொதுமக்கள் மற்றும் பயணியர் நலன் கருதி, அரசு போக்குவரத்து கழகம், செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகம் இணைந்து, குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.