/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நுகர்வோரின் இணைப்பு விபரங்கள் மின் வாரிய செயலியில் பதிவேற்றம்
/
நுகர்வோரின் இணைப்பு விபரங்கள் மின் வாரிய செயலியில் பதிவேற்றம்
நுகர்வோரின் இணைப்பு விபரங்கள் மின் வாரிய செயலியில் பதிவேற்றம்
நுகர்வோரின் இணைப்பு விபரங்கள் மின் வாரிய செயலியில் பதிவேற்றம்
ADDED : மே 18, 2024 12:19 AM

மாமல்லபுரம்,:மாமல்லபுரத்தில், வீடுகள், விடுதிகள், கைவினைப் பொருட்கள் விற்பனை கடைகள், சுற்றுலா சார்ந்த பிற தொழில்கள் ஆகியவை உள்ளன. மின்சார பயன்பாட்டு நுகர்வோர், ஒருமுனை, மும்முனை மின் இணைப்பு பெற்றுள்ளனர்.
மின் இணைப்பு பெற, 'ஆன்லைனில்' விண்ணப்பித்தல், மின் அளவீடு, கட்டணம் உள்ளிட்ட விபரங்கள், வாரிய இணையதளத்தில் பதிவேற்றுதல், பொதுமக்கள் 'ஆன்லைனில்' கட்டணம் செலுத்துதல் என, நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், நுகர்வோரின் மின் இணைப்பு விபரங்கள் குறித்து, வாரியத்தின் 'மேப்பிங்' செயலியில், ஊழியர்கள் பதிவேற்றி வருகின்றனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
மின் வாரியத்திற்கென, பிரத்யேக மொபைல் 'ஆப்' உள்ளது. அதில், நுகர்வோர் பெயர், மின் இணைப்பு எண், தெரு உள்ளிட்ட விபரங்களை, 'மேப்பிங்' நடைமுறையில் பதிவேற்றி வருகிறோம்.
இதன் வாயிலாக, மின் இணைப்பு இருப்பிடத்தை, வாரிய தலைமை இடத்திலிருந்தே அறியலாம். இணைப்பு வழங்கியுள்ள பெட்டியிலிருந்து, மின்சார கணக்கீடு மீட்டர் 40 மீட்டருக்குள் இருக்க வேண்டும்.
அவ்வாறு உள்ளதா அல்லது வேறிடத்தில் உள்ளதா, நுகர்வோருக்கு உரிய இணைப்பு தானா என்பதையும், இந்த செயலியின் வாயிலாக அறியலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

