/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூட்டை உடைத்து 5 சவரன் திருட்டு
/
பூட்டை உடைத்து 5 சவரன் திருட்டு
ADDED : ஆக 12, 2024 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி, வள்ளி நகர் நான்காவது தெருவில் வசித்து வருபவர் நிர்மலா, 35. இவரது கணவர் கலைவாணன், 39, இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள நிர்மலாவின் அம்மா வீட்டிற்கு இருவரும் சென்றனர். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த, 5 சவரன் செயின் மற்றும் வெள்ளி விளக்கு உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

