/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயணியர் நிழற்குடை கட்டும் பணி கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்
/
பயணியர் நிழற்குடை கட்டும் பணி கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்
பயணியர் நிழற்குடை கட்டும் பணி கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்
பயணியர் நிழற்குடை கட்டும் பணி கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்
ADDED : ஏப் 23, 2024 11:04 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகப் பகுதியில், செங்கல்பட்டு -- மதுராந்தகம் தடத்தில் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்கின்றன.
இங்கு, பயணியர் நிழற்குடை இல்லாததால், வெயில் தாக்கத்தால், பொதுமக்கள் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நிழற்குடை கட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, 2023- - 24 நிதியாண்டில், எம்.எல்.ஏ., தொகுதி நிதியில், கலெக்டர் அலுவலகம் அருகிலும், எதிர்புரத்திலும் பயணியர் நிழற்குடை கட்ட, தலா 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இப்பணிக்கு, நிர்வாக அனுமதி வழங்கி, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
அதன்பின், பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கு, கடந்த மார்ச் மாதம் டெண்டர் விடப்பட்டது. இப்பணி விரைவில் துவங்கப்பட உள்ளதாக, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.

