/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலை நகரில் கோவில் பூட்டை உடைத்து திருட்டு
/
மறைமலை நகரில் கோவில் பூட்டை உடைத்து திருட்டு
ADDED : ஏப் 26, 2024 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:மறைமலை நகர் என்.ஹெச்.,- 3 சிலப்பதிகாரம் தெருவில், வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இதே வளாகத்தில், விநாயகர் மற்றும் சாய்பாபா சன்னிதிகளும் உள்ளன.
இக்கோவிலில், நேற்று முன்தினம் இரவு நுழைந்த மர்ம நபர்கள், கோவில் உண்டியல் பூட்டை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.
இது குறித்து, கோவில் நிர்வாகி சீனிவாசன் மகன் சுரேந்தர், 25, அளித்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

