/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
10ம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்கள் பயன்பெற சிறப்பு வகுப்பு
/
10ம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்கள் பயன்பெற சிறப்பு வகுப்பு
10ம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்கள் பயன்பெற சிறப்பு வகுப்பு
10ம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்கள் பயன்பெற சிறப்பு வகுப்பு
ADDED : மே 20, 2024 09:55 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு வருவாய் கல்வி மாவட்டத்தில், தேர்ச்சி பெறாத 4,851 மாணவர்களுக்கு, சிறப்பு மையம் வாயிலாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
தமிழகம் முழுதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் முடிவடைந்தது. மே மாதம் பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
இதில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள், தமிழ் பாடத்தில், 1,010 மாணவர்களும், ஆங்கில பாடத்தில் 337 மாணவர்களும், கணிதம் பாடத்தில் 1,295 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 719 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 1,490 மாணவர்கள் என, மொத்தம் 4,851 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
இதைத் தொடர்ந்து, மாவட்ட கல்வித்துறை சார்பில், 'தொடர்ந்து கற்போம்' திட்டத்தின் மூலம், அரசு பள்ளிகளில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டது.
இம்மையத்தில், 4,851 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்து, சனிக்கிழமை தோறும் தேர்வுகள் நடத்தப்படுகிறது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற, கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இவர்களுக்கு, சிறப்பு பொதுத்தேர்வு வரும் ஜூலை 2ம் தேதி துவங்கி, 8ம் தேதி வரை நடக்கிறது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

