/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பறக்கும் படை வாகன சோதனையில் கொளத்துாரில் ரூ.7 லட்சம் பறிமுதல்
/
பறக்கும் படை வாகன சோதனையில் கொளத்துாரில் ரூ.7 லட்சம் பறிமுதல்
பறக்கும் படை வாகன சோதனையில் கொளத்துாரில் ரூ.7 லட்சம் பறிமுதல்
பறக்கும் படை வாகன சோதனையில் கொளத்துாரில் ரூ.7 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 22, 2024 09:46 PM

செய்யூர்:லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யும் பணியில், பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, கொளத்துார் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், காரில் இருந்து, 2.07 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், காரில் வந்தவர் சென்னை, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த குமாரலிங்கம் என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
இதேபோல, நேற்று காலை சித்தாமூர் அடுத்த பொலம்பாக்கம் பகுதியில், பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தைச் சேர்ந்த நியாஸ் முகமது என்பவர், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 4.85 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 6.92 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், செய்யூர் உதவி தேர்தல் அலுவலர் ராதாவிடம் ஒப்படைத்தனர்.

