/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
5 நாட்களாக மின்மாற்றி பழுது புத்துார் பகுதிவாசிகள் அவதி
/
5 நாட்களாக மின்மாற்றி பழுது புத்துார் பகுதிவாசிகள் அவதி
5 நாட்களாக மின்மாற்றி பழுது புத்துார் பகுதிவாசிகள் அவதி
5 நாட்களாக மின்மாற்றி பழுது புத்துார் பகுதிவாசிகள் அவதி
ADDED : மே 23, 2024 12:50 AM

செய்யூர்:செய்யூர் அருகே புத்துார் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அரசு ஆரம்பப்பள்ளி எதிரே உள்ள மின் மாற்றி வாயிலாக, கிராமத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த 17ம் தேதி மாலை பெய்த மழையின் போது, மின்மாற்றி வெடித்து பழுதடைந்ததால், மின்வினியோகம் நிறுத்தப் பட்டது.
பின், தற்காலிகமாக, விராலுார் ஊராட்சிக்கு உட்பட்ட வெற்றிக்காடு கிராமத்தில் உள்ள மின் மாற்றியுடன் இணைத்து, குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.
பழுதடைந்த மின்மாற்றி, தற்போது வரை சீரமைக்கப்படாமல், இரண்டு கிராமங்களுக்கும் ஒரே மின்மாற்றியில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது.
அதனால், குறைந்த மின் அழுத்தம் காரணமாக, வீட்டு உபயோகப் பொருட்களை பயன்படுத்த முடியாமல், அப்பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள மின் மாற்றியை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

