/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊனமாஞ்சேரி - செங்கைக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை
/
ஊனமாஞ்சேரி - செங்கைக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை
ADDED : மார் 30, 2024 11:08 PM
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊனமாஞ்சேரி ஊராட்சி பகுதியில் வசிப்போர், மருத்துவ சேவைக்காக நந்திவரம் அரசு மருத்துவமனைக்கும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் செல்கின்றனர்.
மேலும், இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ- - மாணவியர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
அவர்கள் ஊனமாஞ்சேரியில் இருந்து பள்ளி செல்வதற்கு, வேங்கடமங்கலம் வந்து, அங்கிருந்து மற்றொரு பேருந்து பிடித்து வண்டலுாரில் இறங்கி, அங்கிருந்து மற்றொரு பேருந்து வாயிலாக செங்கல்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கால விரயம், வீண் அலைச்சல் ஏற்படுகிறது.
இங்கிருந்து செங்கல்பட்டிற்கு, காலை மற்றும் மாலை வேளைகளில் மாநகர பேருந்துகளை இயக்கினால், மருத்துவமனை செல்வோருக்கும், பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இது குறித்து, நாங்கள் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, மருத்துவமனை செல்லும் நோயாளிகள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியரின் நலன் கருதி, ஊனமாஞ்சேரியில் இருந்து செங்கல்பட்டுக்கு பேருந்துகளை இயக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

