sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தேர்தல் செலவின பார்வையாளர்கள் வருகை தொடர்பு கொள்ள மொபைல் எண் வெளியீடு

/

தேர்தல் செலவின பார்வையாளர்கள் வருகை தொடர்பு கொள்ள மொபைல் எண் வெளியீடு

தேர்தல் செலவின பார்வையாளர்கள் வருகை தொடர்பு கொள்ள மொபைல் எண் வெளியீடு

தேர்தல் செலவின பார்வையாளர்கள் வருகை தொடர்பு கொள்ள மொபைல் எண் வெளியீடு


ADDED : மார் 21, 2024 08:59 AM

Google News

ADDED : மார் 21, 2024 08:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் தொகுதிக்கு, மதுக்கர் ஆவேஸ் என்பவரும், ஸ்ரீபெரும்புதுார் தொகுதிக்கு சந்தோஷ் சரண் என்பவரும் நியமிக் கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் பார்வையாளரை 72005 55395 என்ற எண்ணிலும், ஸ்ரீபெரும்புதுார் பார்வையாளரை 99403 53325 என்றஎண்ணிலும் பொதுமக்கள்,அரசியல் கட்சியினர் தொடர்பு கொள்ளலாம்.

இருவரும், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர். தேர்தல் சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கலெக்டர்கலைச்செல்வியிடம்கேட்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தின்மூன்றாவது மாடியில் இயங்கும், கட்டுப்பாட்டு அறை மற்றும் மீடியாசென்டர் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார்கள் பற்றியும், சமூக வலைதலங்களை கண்காணிப்பது பற்றியும்,அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து, கலெக்டர் வளாக கூட்டரங் கில், இரு செலவின பார்வையாளர்கள் தலைமையில், தேர்தல் செலவின குழுவினருடன் ஆலோசனைகூட்டம் நடந்தது.

இதையடுத்து, இரு செலவின பார்வையாளர் களும் கூட்டாக நிருபர் களிடம் கூறியதாவது:

வாக்காளர்கள் தைரியமாக ஓட்டளிக்க வேண்டும். எந்த புகாராக இருந்தாலும் என்னிடம் புகார் அளிக்கலாம்.

வாக்காளர்கள் தேர்தல் சம்பந்தமான புகார்களை 'சி -விஜில்' மொபைல்ஆப் மூலம் தெரிவிக் கலாம்.

எங்கள் இருவரின் மொபைல் எண்களிலும் வாக்காளர்கள் புகார்களை பதிவு செய்யலாம்.பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுவினர்,வாகனங்களைகண்காணித்து, கணக்கில் வராத பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

பறிமுதல் செய்யப்பட்டபணம், பொருட்களை மீண்டும் பெற, கலெக்டர்தலைமையிலான குழு மூலம் ஆய்வு செய்த பின், திருப்பி ஒப்படைக்கப்படும். வேட்பாளர்அறிமுக கூட்டங்களில் உணவு பறிமாறினால், வேட்பாளர் செலவில் கணக்கில் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள்கூறினர்.






      Dinamalar
      Follow us