/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வரி செலுத்துவோரின் மொபைல் எண் மென்பொருளில் பதிவு செய்ய வாய்ப்பு
/
வரி செலுத்துவோரின் மொபைல் எண் மென்பொருளில் பதிவு செய்ய வாய்ப்பு
வரி செலுத்துவோரின் மொபைல் எண் மென்பொருளில் பதிவு செய்ய வாய்ப்பு
வரி செலுத்துவோரின் மொபைல் எண் மென்பொருளில் பதிவு செய்ய வாய்ப்பு
ADDED : பிப் 23, 2025 07:52 PM
தாம்பரம்,:வரி செலுத்துவோர், தங்களது மொபைல் போன் எண்களை, வரி செலுத்தும் கணினி மென்பொருளில் பதிவு செய்திட, தாம்பரம் மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:
தாம்பரம் மாநகராட்சி, ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வரி வசூல் மையங்களில், வரி செலுத்த வருவோர், தங்களது மொபைல் போன் எண்களை, வரி செலுத்திடும் கணினி மென்பொருளில் பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
ஏற்கனவே, மொபைல் போன் எண்களை பதிவு செய்துள்ள வரி செலுத்துவோர், மொபைல் போன் எண்களில் ஏதேனும் மாற்றம் இருப்பின், அதையும் பதிவு செய்திட வேண்டும்.
வரி செலுத்துவோர், தாம்பரம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி, குடிநீர் வைப்புத்தொகை, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை உடனடியாக செலுத்தி, தாம்பரம் மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.