/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காஞ்சிபுரம் ஓட்டுப்பதிவு விபரங்களை வெளியிடுவதில் அதிகாரிகள் குளறுபடி
/
காஞ்சிபுரம் ஓட்டுப்பதிவு விபரங்களை வெளியிடுவதில் அதிகாரிகள் குளறுபடி
காஞ்சிபுரம் ஓட்டுப்பதிவு விபரங்களை வெளியிடுவதில் அதிகாரிகள் குளறுபடி
காஞ்சிபுரம் ஓட்டுப்பதிவு விபரங்களை வெளியிடுவதில் அதிகாரிகள் குளறுபடி
ADDED : ஏப் 23, 2024 04:08 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டசபை தொகுதியிலும், 17.48 லட்சம் ஓட்டுகள் உள்ளன. இதில், 12 லட்சத்து, 53 ஆயிரத்து, 582 பேர் ஓட்டு செலுத்தியுள்ளனர். இது, 71.68 சதவீதமாகும்.
தேர்தல் நடந்த வெள்ளிக்கிழமை இரவு 11:00 மணிக்கு ஒரு விபரமும், சனிக்கிழமை மதியம் 1:00 மணிக்கு ஒரு விபரமும் வெளியிட்டனர். சனிக் கிழமை வெளியிட்ட ஓட்டுப்பதிவு விபரங்கள் பல தவறாக இருந்தன.
இதைத் தொடர்ந்து, இறுதியாக சரியான விபரங்களை, திங்கட்கிழமையான நேற்று தான், தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டனர். புள்ளி விபரங்கள் சேகரிப்பில், கடந்த மூன்று நாட்கள் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.
தேர்தலில் பதிவான 12.53 லட்சம் ஓட்டுகளில், வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி, 11.3 லட்சம் பேர் ஓட்டளித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இது, 90.9 சதவீதமாகும்.
வாக்காளர் அடையாள அட்டையை தவிர்த்து, பிற வகையான ஆவணங்களை பயன்படுத்தி, 1.13 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு செலுத்தியுள்ளனர். இது, 9.0 சதவீதம்.
வாக்காளர்கள் அனைவரிடமும், ஆதார் உள்ளிட்ட பல்வேறு அடையாள அட்டைகள் இருப்பினும், தேர்தல் நாளில், தங்களின் வாக்காளர் அட்டையை மறக்காமல் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
அதேபோல், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், 8.53 லட்சம் ஆண் வாக்காளர்களில், 6.31 லட்சம் பேர் ஓட்டளித்துள்ளனர்; இது,74.0 சதவீதம்.
அதேபோல், 8.9 லட்சம் பெண் வாக்காளர்களில், 6.21 லட்சம் பேர் மட்டுமே ஓட்டளித்துள்னர். இது, 69.1 சதவீதம். மூன்றாம் பாலினத்தவர்களில், 303 பேரில், 83 பேர் மட்டுமே ஓட்டளித்துள்ளனர்.

