/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை பகிங்ஹாம் கால்வாயில் நீரோட்டம் தடுக்கும் கான்கிரீட் தளம்
/
மாமல்லை பகிங்ஹாம் கால்வாயில் நீரோட்டம் தடுக்கும் கான்கிரீட் தளம்
மாமல்லை பகிங்ஹாம் கால்வாயில் நீரோட்டம் தடுக்கும் கான்கிரீட் தளம்
மாமல்லை பகிங்ஹாம் கால்வாயில் நீரோட்டம் தடுக்கும் கான்கிரீட் தளம்
ADDED : ஆக 27, 2024 01:08 AM

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பகுதி பகிங்ஹாம் கால்வாயில், திருக்கழுக்குன்றம் சாலை குறுக்கிடும் இடத்தில், உயர்மட்ட பாலம் உள்ளது. அதன் கட்டுமானப் பணிகளை, 13 ஆண்டுகளுக்கு முன் துவக்கி, பாலம் மட்டும் கட்டப்பட்டது.
அணுகு பாதை அமைக்க, பல ஆண்டுகளாக தாமதமாகி, கடந்த 2019ல் பிரதமர் மோடி வருகையை ஒட்டி முடித்து, போக்குவரத்தும் துவக்கப்பட்டது.
தொடர்ந்து, 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, பால கட்டுமானப் பகுதியில், பெருமளவு மண் சரிந்து, பாலத்திற்கு ஆபத்தாக அமைந்தது.
எனவே, பாலத்தின்கீழ் கால்வாயின் குறுக்கில், துாண்களை இணைக்கும் வகையில், கான்கிரீட் தளம் அமைத்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பால கட்டுமானப் பணிகள் முடிந்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக, பாலத்தில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், கால்வாயில் அமைக்கப்பட்ட கான்கிரீட் தளம், தற்போதும் அகற்றப்படாமல் நிரந்தரமாக நீடிக்கிறது.
வடகிழக்கு பருவமழையின் போது, சென்னை புறநகர் பகுதிகளில் பெருக்கெடுக்கும் வெள்ளம், இக்கால்வாயில் பெருக்கெடுத்து, வங்க கடலில் கலக்கும்.
கான்கிரீட் தளத்திற்கு மேல் நீர்மட்டம் இருந்தால், நீரோட்டம் உள்ளது. இத்தளத்திற்கு கீழ் நீர்மட்டம் இருந்தால், பால பகுதியில் நீரோட்டம் தடைபட்டு, தளத்தின் இரண்டு புறமும் குளம்போல் தேங்குகிறது.
வெள்ளம் பெருகும்போதும், இயல்பான நீரோட்டம் தடைபட்டு, பக்கவாட்டில் புகுந்து பாதிக்கிறது. நிலையாக நீர் தேங்கி, கால்வாயிலும் முட்புதர் சூழ்ந்துள்ளது.
அதனால், நீரோட்டத்திற்கு இடையூறாக உள்ள கான்கிரீட் தளத்தை அகற்ற வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.

