/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குளத்தின் பரப்பு அதிகரிப்பு தண்ணீர் தேக்க நடவடிக்கை
/
குளத்தின் பரப்பு அதிகரிப்பு தண்ணீர் தேக்க நடவடிக்கை
குளத்தின் பரப்பு அதிகரிப்பு தண்ணீர் தேக்க நடவடிக்கை
குளத்தின் பரப்பு அதிகரிப்பு தண்ணீர் தேக்க நடவடிக்கை
ADDED : மே 21, 2024 11:42 PM

அனகாபுத்துார், : தாம்பரம் மாநகராட்சி, 4வது வார்டு, அனகாபுத்துாரில், வார்டு அலுவலகம் பின்புறத்தில் கல் மடுவு எனும் அரசு நிலம் உள்ளது.
பல ஏக்கர் பரப்புடைய இந்த இடத்தின் ஒருபகுதியில் குளம் அமைத்து, சுற்றுச்சுவர், நடைபாதை, மின் விளக்கு, பூச்செடிகள் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. சுற்றியுள்ள மக்கள், காலை மற்றும் மாலையில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், காலியாக உள்ள, 7 ஏக்கர் நிலத்தையும், குளமாக மாற்றி, மழைநீரை சேமிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து 3 கோடி ரூபாய் செலவில், அந்த இடத்தை துார்வாரி, ஆழப்படுத்தி குளம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
ஓரிரு மாதங்களில்இப்பணி முடிந்து, வடகிழக்கு பருவமழை தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.