/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பட்டாசு வெடித்து விதிமீறல்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
பட்டாசு வெடித்து விதிமீறல்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
பட்டாசு வெடித்து விதிமீறல்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
பட்டாசு வெடித்து விதிமீறல்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : மார் 28, 2024 12:44 AM

காஞ்சிபுரம்:லோக்சபா தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள், கடந்த 16ம் தேதி துவங்கியது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்ற, காஞ்சிபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன் தலைமையில், தேர்தல் அதிகாரிகள் கொண்ட குழு செயல்படுகிறது.
தேர்தல் விதிமீறல் பற்றி சம்பந்தப்பட்ட பறக்கும் படை, வீடியோ குழு, கிராம நிர்வாக அலுவலர், போலீசார் உள்ளிட்ட அதிகாரிகளின் தகவல்படி, விதிமீறல் வழக்கு பதிவு செய்யலாம்.
ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல்வேறு விதிமீறல்கள் நடந்தபோதும், இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.
கடந்த திங்கட்கிழமையன்று, வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அரசியல் கட்சியினர், கலெக்டர் வளாகத்தில் வாக்குவாதம் செய்து, போலீசாரை கடுமையாக சாடினர்.
வளாகத்திலேயே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கலெக்டர் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள், 100க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் திரண்டிருந்தனர்.
இதுகுறித்தும் எந்த வழக்கும் பதிவாகவில்லை. அதேபோல, பிரசாரத்தின்போது வெடி வெடிக்கக் கூடாது என, கலெக்டர் கலைச்செல்வி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
ஆனால், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், அரசியல் கட்சியினர் பிரசாரத்தின்போது சரவெடியாக வெடிக்கின்றனர்.இவற்றையும், தேர்தல் அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.
மாவட்டம் முழுதும் பல்வேறு விதிமீறல்கள் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

