/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் தி.மு.க., வேட்பாளர்கள் ஆதரவு
/
உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் தி.மு.க., வேட்பாளர்கள் ஆதரவு
உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் தி.மு.க., வேட்பாளர்கள் ஆதரவு
உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் தி.மு.க., வேட்பாளர்கள் ஆதரவு
ADDED : மார் 23, 2024 10:46 PM

சென்னை:காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம், சென்னை அடுத்த மறைமலை நகரில் நேற்று நடந்தது.
அக்கட்சியின் மாவட்ட செயலர் அமைச்சர் அன்பரசன் தலைமையில், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் தனி தி.மு.க., வேட்பாளர் செல்வம் முன்னிலை வகித்தனர். வேட்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் ஆதரவு கோரினர்.
டி.ஆர்.பாலு பேசியதாவது:
கடந்த 2018ல் உருவான கூட்டணி, சிந்தாமல் சிதறாமல் ஒன்பது கட்சிகளை இணைத்து, தேர்தல்களை சந்தித்து வருகிறது. யாருக்கும் மனக்கசப்பு இல்லை.
நம் ஆட்சியின் சாதனை பட்டியலை, மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசின் நலத்திட்டங்களை விளம்பரப்படுத்தி வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.
அரசியலும், விளம்பரமும் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள். இந்தியாவிலேயே 40க்கு 40க்கு வெற்றி வாய்ப்பு உள்ள மாநிலம் இது தான். வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தேர்தல் பணிகளை, கண்கொத்தி பாம்பாக தலைமை கவனித்து வருகிறது. தேர்தல் பணிகளை முறையாக செய்து, தங்களின் பதவிகளை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என, அன்போடு கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

