/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க முடிவு
/
மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க முடிவு
ADDED : மே 19, 2024 01:31 AM

செங்கல்பட்டு,:செங்கல்பட்டு மாவட்டத்தில், 19 மாற்றுத்திறனாளிகள், செயற்கை கை, கால் வழங்க கோரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலரிடம் மனு அளித்தனர். இம்மனுவை, மாவட்ட கலெக்டரிடம், மாற்றுத்திறனாளிகள் வழங்கினர்.
அதன்பின், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால் பொருத்த தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் வழங்க, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
கடந்த 16ம் தேதி தனியார் நிறுவனம், மாற்றுத்திறனாளிகளின் கை, கால் ஆகியவற்றை அளவு எடுத்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் குழந்தைகள் இல்லங்கள் உள்ளன.
இந்த இல்லத்தில் தங்கி, கல்வி பயின்று வரும் குழந்தைகளில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கு, தலா 50,000 ரூபாய் என, மொத்தம் 1.50 லட்சம் ரூபாய் நிதியை, சமூக பொறுப்பு நிதியில் இருந்து, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.

