/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதல்வர் கோப்பை போட்டி விண்ணப்பிக்க அழைப்பு
/
முதல்வர் கோப்பை போட்டி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 09, 2024 10:36 PM
செங்கல்பட்டு:தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில், புதிதாக விளையாட்டு போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில், தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கான இணையதள முன்பதிவை, இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்.
இப்போட்டிகள் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள், https;//sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலகம் அல்லது விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை, 044- - 2723 8477 மற்றும் 7401703461 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

