/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் தேரோட்டம் ஆக்கிரமிப்புகளால் சேற்றில் சிக்கிய தேர்

ADDED : ஏப் 20, 2024 11:49 PM

மதுராந்தகம்:அச்சிறுபாக்கத்தில், இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை பிரமோற்சவம், இம்மாதம் 14ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் மூன்றா-வது நாளன்று, அதிகார நந்தி சேவையில், 63 நாயன்மார்கள் வீதி உலாவும் நடந்தது. ஐந்தாவது நாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடந்தது. விழாவையொட்டி, காலை 7:30 மணிக்கு, 36 அடி உயரமுள்ள பெரிய தேரில், ஆட்சீஸ்வரர், இளங்கிளியம்மன் எழுந்தருளி அருள்பாலித்தனர். 27 அடி உயரமுள்ள சிறிய தேரில், இளங்கிளி அம்மன் எழுந்தருளினார்.
அதை தொடர்ந்து, காலை 8:30 மணிக்கு, 'அரோகரா' கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்க, ஈஸ்வரன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, மேற்கு மாட வீதி, யாதவர் தெரு என, நான்கு மாட வீதிகளிலும் தேர் வலம் வந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஆட்சீஸ்வர பெருமானையும், இளங்கிளி அம்மனையும் தரிசனம் செய்தனர். விழாவில் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கும் விதமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மேலும், 108 அவசர ஊர்தி, தீயணைப்பு துறை, காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர் செல்லும் மாடவீதி பகுதிகளில், மோர், பானகம், சுண்டல், குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.