/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோடை மழையால் எள் பயிர் சேதம் நிவாரணம் வழங்க வேண்டுகோள்
/
கோடை மழையால் எள் பயிர் சேதம் நிவாரணம் வழங்க வேண்டுகோள்
கோடை மழையால் எள் பயிர் சேதம் நிவாரணம் வழங்க வேண்டுகோள்
கோடை மழையால் எள் பயிர் சேதம் நிவாரணம் வழங்க வேண்டுகோள்
ADDED : மே 21, 2024 11:44 PM

செய்யூர் : செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்குட்பட்ட லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியத்தில் 84 ஊராட்சிகளில், 30,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் அதிக படியாக சம்பா பருவத்தில் நெல் மற்றும் மணிலா விவசாயம் செய்யப்படுகிறது. சம்பா பருவத்தில் பயிரிடப்பட்ட நெல்மற்றும் மணிலா அறுவடை செய்யப்பட்டு, தற்போது விவசாயிகள் கோடைப் பயிர்களான எள், உளுந்து, தினை போன்றவற்றை பயிரிட்டுள்ளனர்.
செய்யூர் பகுதி முழுதும் பரவலாக, 150 ஏக்கர் பரப்பளவில் எள் பயிரிடப்பட்டுள்ளது. வளிமண்டலகீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த ஒரு வாரமாக செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
இதனால், எள் பயிரிடப்பட்டுள்ள வயல் வெளியில் தண்ணீர் தேங்கி, பூக்கள் உதிர்ந்து, அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும், பருவநிலை மாற்றம் காரணமாக, இலை துளைப்பான் மற்றும் காய் புழுஅதிகளவில் எள் பயிரை தாக்குவதாக விவசாயிகள்குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கோடை மழையால் பாதிக்கப்பட்டுள்ள எள் பயிர்களை ஆய்வு செய்து,உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

