/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுதல் வகுப்பறை கட்டடம் களத்துார் மக்கள் கோரிக்கை
/
கூடுதல் வகுப்பறை கட்டடம் களத்துார் மக்கள் கோரிக்கை
கூடுதல் வகுப்பறை கட்டடம் களத்துார் மக்கள் கோரிக்கை
கூடுதல் வகுப்பறை கட்டடம் களத்துார் மக்கள் கோரிக்கை
ADDED : மே 17, 2024 09:12 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே களத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, கூடுதல் வகுப்பறை கட்டடம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
களத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 70-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு, மூன்று வகுப்பறைகள் கொண்ட ஒரே கட்டடத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகின்றன. இதனால், மாணவர்கள் இட நெருக்கடியில் தவித்து வருகின்றனர்.
எனவே, வரும் கல்வி ஆண்டில், மாணவர்களின் நலன்கருதி, புதிதாக வகுப்பறை கட்டடம் அமைக்க வேண்டும். இது குறித்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.