/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு போக்சோ
/
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு போக்சோ
ADDED : ஏப் 06, 2024 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேல்மருவத்துார்:அச்சிறுபாக்கம் அடுத்த பெரியகயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆபிரகாம், 30. அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், வீட்டின் அருகே உள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது, கடை அருகே நின்று கொண்டிருந்த ஆபிரகாம், அச்சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். நேற்று சிறுமியின் பெற்றோர், மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்படி, போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், ஆபிரகாமை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

