/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிரமாண பத்திரம் பெற்று 420 ரவுடிகள் விடுவிப்பு
/
பிரமாண பத்திரம் பெற்று 420 ரவுடிகள் விடுவிப்பு
ADDED : ஏப் 02, 2024 01:29 AM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில், செங்கல் பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய காவல் துணை கண்காணிப்பு அலுவலர் கட்டுப்பாட்டில், 20 காவல் நிலையங்கள் உள்ளன.
மாவட்டத்தில், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 518 ரவுடிகள் உள்ளனர். இதில், செங்கல்பட்டில் 211, மாமல்லபுரத்தில் 162, மதுராந்தகத்தில் 145 ரவுடிகள் உள்ளனர்.
கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட 35 ரவுடிகள், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, லோக்சபா தேர்தலில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 420 ரவுடிகளை, செங்கல்பட்டு சப்- - கலெக்டர், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரிடம், கடந்த சில தினங்களாக போலீசார் ஆஜர்படுத்தினர்.
அதன்பின், ரவுடிகளிடம் ஓராண்டிற்கு நன்னடத்தை பிரமாண பத்திரம் எழுதி வாங்கியும், இரு நபர் ஜாமினிலும், சப்- - கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் விடுவித்தனர்.
இவர்களை தனிப்படை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள 63 ரவுடிகளை பிடிக்கும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

