/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
3 தொகுதிக்கு கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
/
3 தொகுதிக்கு கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
ADDED : ஏப் 02, 2024 01:19 AM
மறைமலை நகர், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சி அலுவலகத்தில், தேர்தலுக்கு பயன்படுத்தும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சீல் வைக்கப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
லோக்சபா தேர்தலுக்காக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிவாரியாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கடந்த மாதம் 21ம் தேதி, தேர்தல் ஆணைய அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார், தென் சென்னை லோக்சபா தொகுதிகளில், வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமானது.
அதனால், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட தாம்பரம், பல்லாவரம் சட்டசபை தொகுதிகளுக்கு 1,036 ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், தென்சென்னை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதிக்கு 1,602 ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், மாவட்ட தேர்தல் அதிகாரி அருண்ராஜ் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டன.
தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லுார் பகுதி தேர்தல் துணை வட்டாட்சியர் மற்றும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.

