/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வெண்கலம் வென்றார் அன்டிம் * உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்...
/
வெண்கலம் வென்றார் அன்டிம் * உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்...
வெண்கலம் வென்றார் அன்டிம் * உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்...
வெண்கலம் வென்றார் அன்டிம் * உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்...
ADDED : செப் 19, 2025 11:14 PM

ஜாக்ரெப்: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் அன்டிம் பங்கல்.
குரோஷியாவின் ஜாக்ரெப்பில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' பிரிவு போட்டி நடந்தன. 53 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அன்டிம் பங்கல், 3-5 என ஈகுவடாரின் லுாசியாவிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அன்டிம், இரு முறை ஐரோப்பிய சாம்பியன் ஆன சுவீடனின் ஜோனா மால்ம்கிரெனை சந்தித்தார். இதில் சிறப்பாக செயல்பட்ட அன்டிம், 9-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலம் கைப்பற்றினார்.
கடந்த 2023ல் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றிருந்தார். இதையடுத்து, வினேஷ் போகத்துக்கு அடுத்து, உலக சாம்பியன்ஷிப்பில் இரண்டு வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை என பெருமை பெற்றார் அன்டிம்.
ஆண்கள் கிரிகோ ரோமன் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சுராஜ் வஷிஸ்ட், 3-1 என 2021 உலக சாம்பியன் விக்டரை (மால்டோவா) சாய்த்து, காலிறுதிக்குள் நுழைந்தார். இதில் 1-4 என செர்பியாவின் டிபிலவிடம் தோல்வியடைந்தார்.