ADDED : ஜன 01, 2026 10:29 PM

எம்பாப்வே காயம்
மாட்ரிட்: பிரான்ஸ் கால்பந்து வீரர் எம்பாப்வே 27. உள்ளூர் போட்டியில் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடும் இவர், கடந்த ஆண்டு 59 கோல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோவின் (போர்ச்சுகல்) சாதனையை சமன் செய்திருந்தார். இந்நிலையில், இடது முழங்காலில் காயமடைந்த எம்பாப்வே, குறைந்தபட்சம் 3 வாரம் போட்டியில் பங்கேற்கமாட்டார் என செய்தி வெளியாகின.
யுனைடெட் கோப்பை ஆரம்பம்
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி, பெர்த் நகரில், கலப்பு அணிகளுக்கான யுனைடெட் கோப்பை டென்னிஸ் 4வது சீசன் இன்று துவங்குகிறது. 'நடப்பு சாம்பியன்' அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட 18 அணிகள் பங்கேற்கின்றன. இன்று நடக்கும் லீக் சுற்று போட்டிகளில் ஸ்பெயின்-அர்ஜென்டினா, கிரீஸ்-ஜப்பான் அணிகள் விளையாடுகின்றன.
பெர்த் அணி வெற்றி
ஹோபர்ட்: ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடந்த 'பிக் பாஷ் லீக்' கிரிக்கெட் தொடருக்கான ('டி-20') லீக் போட்டியில், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி (229/3), 40 ரன் வித்தியாசத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை (189/9) வீழ்த்தியது. பெர்த் அணிக்கு மிட்செல் மார்ஷ் (102), ஆரோன் ஹார்டி (94*) கைகொடுத்தனர்.
எக்ஸ்டிராஸ்
* சார்ஜாவில் நடந்த யூத் ஆசியகோப்பை பாய்மரப்படகு கோப்பை போட்டியில் இந்தியாவின் ஷ்ரேயா கிருஷ்ணா, மொத்தம் 76 புள்ளிகள் பெற்று, வெண்கலம் கைப்பற்றினார்.
* வதோதராவில், டபிள்யு.டி.டி., யூத் கன்டென்டர் (ஜன. 2-5), டபிள்யு.டி.டி., பீடர் சீரிஸ் (ஜன. 7-11) டேபிள் டென்னிஸ் தொடர்கள் நடக்கவுள்ளன. இதில் 10 நாடுகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் மானுஷ் ஷா, தியா, திவ்யான்ஷி உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.
* இந்தியாவில் பெண்களுக்கான கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) தொடர் நடக்கிறது. 8 அணிகள் மோதுகின்றன. இன்று ஐந்தாவது சுற்று போட்டிகள் கோல்கட்டாவில் நடக்கின்றன. இதில் ஈஸ்ட் பெங்கால்-நீடா, சேது-சேசா, கிக்ஸ்டார்ட்-ஸ்ரீபூமி, கோகுலம் கேரளா-கார்வல் அணிகள் மோதுகின்றன.

