sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : டிச 29, 2025 11:05 PM

Google News

ADDED : டிச 29, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபலென்கா ஏமாற்றம்

துபாய்: துபாயில் நடந்த 'பேட்டில் ஆப் தி செக்சஸ்' என்ற கண்காட்சி டென்னிஸ் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ஆஸ்திரேலிய வீரர் நிக் கிரியாஸ் மோதினர். இதில் ஏமாற்றிய சபலென்கா 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

டாட்டன்ஹாம் வெற்றி

லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் பிரிமியர் லீக் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் கிறிஸ்டல் பேலஸ், டாட்டன்ஹாம் அணிகள் மோதின. ஆர்ச்சி கிரே (42வது நிமிடம்) கைகொடுக்க டாட்டன்ஹாம் அணி 1-0 என்ற கணக்கில் 7வது வெற்றியை பதிவு செய்தது.

கேமரூன் 'எஸ்கேப்'

மராகேஷ்: கேமரூனில் நடக்கும் ஆப்ரிக்க கோப்பை கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் ஐவரி கோஸ்ட், கேமரூன் அணிகள் மோதின. அமத் (51வது நிமிடம்) ஒரு கோல் அடிக்க ஐவரி கோஸ்ட் 1-0 என முன்னிலை பெற்றது. பின், 56வது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் வீரர் கோனன் 'சேம் சைடு' கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது. கேமரூன் அணி தோல்வியிலிருந்து தப்பியது.

எக்ஸ்டிராஸ்

* கிரேட்டர் நொய்டாவில் நடந்த 'ரேபிட் ரேட்டிங்' செஸ் தொடரில் டில்லியை சேர்ந்த இளம் வீரர் ஜக்ரீத் மிஸ்ரா 13, சாம்பியன் பட்டம் வென்றார். ஒன்பது சுற்றில், 8.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.

* இந்திய ஓபன் பாட்மின்டன் தொடர் வரும் ஜன. 13-18ல் டில்லியில் உள்ள இந்திரா உள்ளரங்கு மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை துவங்கியது.

* பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக, ஆஸ்திரேலியாவின் முன்னாள் 'சுழல்' வீராங்கனை கிறிஸ்டன் பீம்ஸ் 41, நியமனம்.

* கபடி சாம்பியன்ஸ் லீக் முதல் சீசனுக்கான ரோதக் ராயல்ஸ் அணியில் இந்திய 'ஆல்-ரவுண்டர்' சந்தீப் நார்வல் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us