sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : செப் 20, 2025 11:14 PM

Google News

ADDED : செப் 20, 2025 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பைனலில் ஸ்வியாடெக்

சியோல்: கொரிய ஓபன் டென்னிஸ் அரையிறுதில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ஆஸ்திரேலியாவின் மாயா ஜாய்ண்ட் மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.

காலிறுதியில் துருக்கி

பாசே: பிலிப்பைன்சில் நடக்கும் உலக வாலிபால் சாம்பியன்ஷிப் 'ரவுண்டு-16' போட்டியில் நெதர்லாந்து, துருக்கி அணிகள் மோதின. இதில் துருக்கி அணி 3-1 (27-29, 25-23, 25-16, 25-19) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

கனடா கலக்கல்

பிரிஸ்டோல்: இங்கிலாந்தில் நடக்கும் பெண்களுக்கான உலக கோப்பை ரக்பி அரையிறுதியில், 'நடப்பு சாம்பியன்' நியூசிலாந்து, கனடா அணிகள் மோதின. இதில் கனடா அணி 34-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக (2014, 2025) பைனலுக்குள் நுழைந்தது.

கத்தார் அபாரம்

அம்மான்: ஜோர்டானில் நடக்கும் ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் (17 வயது) லீக் போட்டியில் கத்தார் அணி 32-25 என, ஜோர்டானை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ஈரான் அணி 35-30 என குவைத்தை வென்றது.

எக்ஸ்டிராஸ்

* ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணி, 5 போட்டிகள் (செப். 26 - அக். 2) கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி கேப்டனாக ஜோதி சிங் நியமிக்கப்பட்டார்.

* இளம் ஜூடோ வீராங்கனை ஹிமான்ஷி 20, உலக ஜூனியர் தரவரிசையில் (63 கிலோ பிரிவு) 'நம்பர்-1' இடம் பிடித்த முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.

* பெண்களுக்கான கிளப் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் முதல் சீசனில் (டிச. 5-20, இடம்: நேபாளம்) இந்தியா சார்பில் ஈஸ்ட் பெங்கால் அணி பங்கேற்கிறது.

* நவி மும்பையில், வரும் டிசம்பர் மாதம் முதன்முறையாக 'பார்முலா நைட் ஸ்டிரீட்' கார்பந்தயம் நடத்தப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us