sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

ஜோதி, பர்னீத் கவுர் வாய்ப்பு * ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் இடம்

/

ஜோதி, பர்னீத் கவுர் வாய்ப்பு * ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் இடம்

ஜோதி, பர்னீத் கவுர் வாய்ப்பு * ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் இடம்

ஜோதி, பர்னீத் கவுர் வாய்ப்பு * ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் இடம்


ADDED : ஜன 01, 2026 11:00 PM

Google News

ADDED : ஜன 01, 2026 11:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஒலிம்பிக் பதக்க திட்டத்திற்கான பட்டியலில் வில்வித்தை வீராங்கனைகள் ஜோதி, பர்னீத் கவுர் சேர்க்கப்பட்டனர்.

மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், 'ஒலிம்பிக் பதக்க திட்டம்' (டி.ஒ.பி.எஸ்.,) செயல்படுத்தப்படுகிறது. இதன் படி, திறமையான நட்சத்திரங்கள் கண்டறியப்பட்டு, ஒலிம்பிக்கில் அவர்கள் சாதிக்க தேவையான பயிற்சி, வசதிகள் செய்து தரப்படுகிறது. கடந்த 2024ல் 179 பேர் இடம் பெற்றனர்.

வீரர், வீராங்கனைகள் செயல்பாட்டுக்கு ஏற்ப, ஒவ்வொரு ஆண்டும் இப்பட்டியல் புதுப்பிக்கப்படுகிறது. பாரிஸ் ஒலிம்பிக் (2024) முடிந்த நிலையில் 2025ல் 94 பேர் மட்டும் இடம் பிடித்தனர்.

தற்போது 2026, துவக்கத்தில் வெளியான புதிய பிரதான பட்டியலில் மொத்தம் 118 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் வழக்கமான 57 பேருடன், 61 பாரா நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதன்படி 2028, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வர் என்ற எதிர்பார்ப்பில், பர்னீத் கவுர், அபிஷேக், ஜோதி, ஆதித்தி, ஓஜாஸ், பிரியான்ஷ், பிரதமேஷ், ரிஷாப் யாதவ் என காம்பவுண்டு பிரிவு வில்வித்தை நட்சத்திரங்கள் 8 பேர் புதியதாக சேர்க்கப்பட்டனர். ஏற்கனவே ரிகர்வ் பிரிவின் தீபிகா குமாரி, திராஜ், அன்கிதா உள்ளனர்.

தவிர தடகளத்தில் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), முரளி ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), சர்வேஷ் (உயரம் தாண்டுதல்) உள்ளனர். டென்னிஸ், கோல்ப், நீச்சலில் யாரும் இடம் பெறவில்லை. டேபிள் டென்னிசில் மனுஷ் ஷா, மானவ் தக்கார், தியா உள்ளிட்டோர், 'டெவலப்மெண்ட்' பிரிவில் இடம் பெற்றனர்.

ஆசிய பட்டியலில் மாயா

ஜப்பானில் ஆசிய விளையாட்டு (செப். 19-அக். 4) நடக்க உள்ளது. இதற்கான பதக்க திட்ட பட்டியலில் 48 பேர் இடம் பெற்றனர். டென்னிசில் சுமித் நாகல், யூகி பாம்ப்ரி, புதிய வரவு மாயா, பவானி தேவி (வாள் சண்டை), பிரனதி நாயக் (ஜிம்னாஸ்டிக்ஸ்) உள்ளனர்.

பயிற்சிக்கு எவ்வளவு

டி.ஒ.பி.எஸ்., பட்டியலில் இடம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு செலவின படியாக ரூ. 25,000 முதல் ரூ. 50,000 வரை வழங்கப்படும். வெளிநாடுகளில் பயிற்சி, போட்டிகளில் பங்கேற்கும் காலங்களில் ஒரு நாளைக்கு ரூ. 2250 தரப்படுகிறது.






      Dinamalar
      Follow us