/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஸ்குவாஷ்: அரையிறுதியில் வேலவன்
/
ஸ்குவாஷ்: அரையிறுதியில் வேலவன்
ADDED : ஏப் 27, 2024 10:58 PM

பாரிஸ்: 'பேட்ச்' ஓபன் ஸ்குவாஷ் அரையிறுதிக்கு இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் முன்னேறினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆண்களுக்கான 'பேட்ச்' ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், செக்குடியரசின் ஜக்குப் சோல்னிக்கி மோதினர். இதில் அசத்திய 'நடப்பு தேசிய சாம்பியன்' வேலவன் 3-0 (11-5, 11-6, 11-2) என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
அகங்ஷா ஏமாற்றம்
அமெரிக்காவில் பெண்களுக்கான செயின்ட் ஜேம்ஸ் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் இந்தியாவின் அகங்ஷா சாலுங்கே, உக்ரைனின் அலினா புஷ்மாவை எதிர்கொண்டார். இதில் ஏமாற்றிய அகங்ஷா 0-3 (7-11, 7-11, 8-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

