தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/துப்பாக்கிசுடுதல்: ஷ்ருச்சி அபாரம்

துப்பாக்கிசுடுதல்: ஷ்ருச்சி அபாரம்

துப்பாக்கிசுடுதல்: ஷ்ருச்சி அபாரம்


ADDED : ஏப் 08, 2025 10:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 10:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பியுனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினாவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் போட்டி நடந்தது. ஒலிம்பிக்கில் 2 வெண்கலம் வென்ற இந்தியாவின் மனு பாகர், தகுதிச்சுற்றில் 13வது இடம் பிடித்து வெளியேறினார்.

'டாப்-10' வீராங்கனைகள் பைனலுக்கு முன்னேறினர்.

இதில் சிறப்பாக செயல்பட்ட 18 வயதான இந்தியாவின் ஷ்ருச்சி இந்தர் சிங், சீன வீராங்கனைகளை பின்தள்ளி முதலிடம் பிடித்தார். 244.6 புள்ளி எடுத்த இவர், தங்கப்பதக்கம் கைப்பற்றினார். சீனாவின் வெய் குயான் (241.9), ரான்ஜின் ஜியாங் (211.0) வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்றனர்.

இதுவரை 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என, 4 பதக்கம் வென்ற இந்தியா, முதலிடத்தை சீனாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us