/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் திலோத்தமா * தேசிய துப்பாக்கிசுடுதலில்...
/
தங்கம் வென்றார் திலோத்தமா * தேசிய துப்பாக்கிசுடுதலில்...
தங்கம் வென்றார் திலோத்தமா * தேசிய துப்பாக்கிசுடுதலில்...
தங்கம் வென்றார் திலோத்தமா * தேசிய துப்பாக்கிசுடுதலில்...
ADDED : டிச 27, 2025 11:15 PM

போபால்: தேசிய துப்பாக்கிசுடுதலில் கர்நாடக வீராங்கனை திலோத்தமா தங்கம் வென்றார்.
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் மத்திய பிரதேசத்தின் போபாலில் நடக்கிறது. பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில் கர்நாடக வீராங்கனை திலோத்தமா, 591 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, பைனலுக்குள் நுழைந்தார்.
இதில் சிறப்பாக செயல்பட்ட திலோத்தமா 17, மொத்தம் 466.9 புள்ளி எடுத்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். கேரளாவின் விதர்சா, (462.9), ரயில்வேயின் அயோனிகா (451.8) அடுத்த இரு இடம் பெற்று, வெள்ளி, வெண்கலம் வசப்படுத்தினர்.
50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் ஜூனியர் பிரிவில் ஆர்மி வீராங்கனை ரிதுபர்ணா (458.6) தங்கம் வென்றார்.
அணிகளுக்கான போட்டியில் ராஜஸ்தானின் மனினி, ஸ்வீட்டி, மோனிகா இடம் பெற்ற அணி, மொத்தம் 1751 புள்ளி எடுத்து, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
மத்திய பிரதேசத்தின் ஆஷி, ஸ்ரீவள்ளி, நுாபுர் இடம் பெற்ற அணி (1750) வெள்ளி கைப்பற்றியது. ஜூனியர் அணிகள் பிரிவில் கர்நாடகா, 1749 புள்ளியுடன் தங்கம் வென்றது.

