ADDED : செப் 22, 2025 10:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: கண்காட்சி கால்பந்து போட்டியில் பங்கேற்க ஜமைக்காவின் போல்ட் இந்தியா வரவுள்ளார்.
ஜமைக்காவின் முன்னாள் தடகள வீரர் உசைன் போல்ட் 39. ஒலிம்பிக்கில் 8, உலக சாம்பியன்ஷிப்பில் 11 தங்கம் கைப்பற்றிய போல்ட், 100, 200 மீ., ஓட்டத்தில் உலக சாதனை படைத்துள்ளார். இவர், மும்பையில் வரும் அக். 1ல் நடக்கவுள்ள கண்காட்சி கால்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளார். இதில் பெங்களூரு, மும்பை அணிகளுக்காக விளையாட உள்ளார்.
போல்ட் உடன் இந்திய கால்பந்து வீரர்கள், முன்னணி பாலிவுட் நடிகர்கள், பிரபலங்கள், இப்போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதன்மூலம் இந்திய இளைஞர்களிடம் கால்பந்து மீதான ஆர்வம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.