ADDED : மே 06, 2025 11:06 PM

ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தையில் இந்திய அணிகள் முதலிடம் பிடித்தன.
சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 நேற்று துவங்கியது. காம்பவுண்டு பிரிவில் தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தன. ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீரர்கள் அபிஷேக் வர்மா, 714 புள்ளியுடன் மூன்றாவது இடம் பிடித்தார். ரிஷாப் யாதவ் (713), 4வது, ஓஜாஸ் பிரவின் (707), 10வது இடம் பெற்றனர். ஒட்டுமொத்தமாக இந்திய அணி 2134 புள்ளியுடன் முதலிடம் பிடித்தது.
பெண்கள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் மதுரா, 708 புள்ளியுடன் மூன்றாவது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீராங்கனைகள் ஜோதி (705) 6, சிகிதா (701), 11, ஆதித்தி (699) 13வது இடம் பெற்றனர். இந்திய பெண்கள் அணி 2114 புள்ளியுடன் முதலிடம் பெற்றது. நேரடியாக காலிறுதியில் பங்கேற்க உள்ளது.
ஒற்றையர் தகுதிச்சுற்றில் அசத்திய அபிஷேக் வர்மா, மதுரா ஜோடி கலப்பு அணிகள் பிரிவில் 1422 புள்ளியுடன் முதலிடம் பிடித்தது. நேரடியாக இரண்டாவது சுற்றில் களமிறங்குகிறது.
