/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
அரையிறுதியில் இளம் இந்தியா * தெற்காசிய ஜூனியர் கால்பந்தில்
/
அரையிறுதியில் இளம் இந்தியா * தெற்காசிய ஜூனியர் கால்பந்தில்
அரையிறுதியில் இளம் இந்தியா * தெற்காசிய ஜூனியர் கால்பந்தில்
அரையிறுதியில் இளம் இந்தியா * தெற்காசிய ஜூனியர் கால்பந்தில்
ADDED : செப் 20, 2025 11:09 PM

கொழும்பு: தெற்காசிய கால்பந்து (17 வயது) அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.
இலங்கையின் கொழும்புவில், 17 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 7 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்திய அணி 'பி' பிரிவில் மாலத்தீவு, பூடான் உள்ளிட்ட அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் 6-0 என மாலத்தீவை வென்றது இந்தியா. இரண்டாவது போட்டியில், 17 வயதுக்குட்பட்ட அணிகள் தரவரிசையில் இரண்டாவது இடத்திலுள்ள (தெற்காசிய அளவில்) இந்தியா, 3வது இடத்திலுள்ள பூடானை சந்தித்தது.
இரு அணிகளும் சம பலத்தில் மோத, முதல் பாதி கோல் எதுவுமின்றி சமனில் முடிந்தது. இரண்டாவது பாதியில் மாற்று வீரராக களமிறங்கிய ரஹான் அகமது, போட்டியின் 60 வது நிமிடத்தில் இந்திய அணிக்கு ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து 6 புள்ளியுடன், பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.