sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கால்பந்து

/

சிக்கலில் இந்திய பெண்கள் கால்பந்து * மோசமான நிர்வாகத்தால் பாதிப்பு

/

சிக்கலில் இந்திய பெண்கள் கால்பந்து * மோசமான நிர்வாகத்தால் பாதிப்பு

சிக்கலில் இந்திய பெண்கள் கால்பந்து * மோசமான நிர்வாகத்தால் பாதிப்பு

சிக்கலில் இந்திய பெண்கள் கால்பந்து * மோசமான நிர்வாகத்தால் பாதிப்பு


ADDED : ஆக 30, 2025 10:55 PM

Google News

ADDED : ஆக 30, 2025 10:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சர்வதேச அரங்கில் சிறப்பாக செயல்பட்ட போதும், மோசமான நிர்வாகத்தினால் இந்திய பெண்கள் கால்பந்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 21வது சீசன், 2026, மார்ச் 1-26ல் ஆஸ்திரேலியாவில் (12 அணிகள்) நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க முதன் முறையாக தகுதி பெற்று வரலாறு படைத்தது இந்தியா.

அடுத்து தாய்லாந்தில் (2026, ஏப். 1-18), 20 வயது பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 12வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்றில் சாதித்த இந்தியா, 20 ஆண்டுகளுக்கு பின் ஜூனியர் ஆசிய கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றது.

அடுத்து, ஆசிய கோப்பை தொடருக்கு தயாராக, வலிமையான அணிகளுக்கு எதிராக குறைந்தது 7 அல்லது 8 போட்டியில் இந்தியா பங்கேற்க வேண்டும். தவிர, செப்டம்பர் மாதம் இந்திய பெண்கள் லீக் துவங்க வேண்டும். ஆனால் இவை குறித்து, எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

தடை மிரட்டல்

மறுபக்கம், 'திருத்தப்பட்ட நிர்வாக விதிகளை அக்., 30க்குள் ஏற்காத பட்சத்தில், இந்திய கால்பந்துக்கு தடை விதிக்கப்படும்,'' என 'பிபா' எச்சரித்துள்ளது. ஒருவேளை தடை விதிக்கப்பட்டால், இந்தியா, இந்திய கிளப் அணிகள் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்.

கடந்த 2022ல் இந்தியாவுக்கு 'பிபா' தடை விதித்தது. இதனால், ஏ.எப்.சி., சாம்பியன்ஸ் லீக் தொடரில், கோகுலம் கேரள பெண்கள் அணியினர் களமிறங்க அனுமதிக்கப்படவில்லை. இதற்காக உஸ்பெகிஸ்தான் சென்ற கேரள பெண்கள் தவித்தனர். இதுபோன்ற சூழல் மீண்டும் ஏற்பட உள்ளது.

வருமானம் இல்லை

ஐ.எஸ்.எல்., தொடரில் கிடைக்கும் வருவாயில் 20 சதவீதத்தை, இந்திய கால்பந்து கூட்டமைப்பு, பெண்கள் கால்பந்துக்கு செலவிடுகிறது. மாறாக ஐ.எஸ்.எல்., தொடர் நடத்தப்படாததால், பெண்கள் கால்பந்து நிலை மோசமாக உள்ளது. பெண்கள் லீக் நடக்கவில்லை எனில், கிடைக்கும் சிறிய வருமானமும் நின்று விடும்.

சர்வதேச அரங்கில் இந்திய பெண்கள் அணியினர் சிறப்பாக செயல்பட்ட போதும், நிர்வாக சீர்கேடுகளால் இந்திய பெண்கள் கால்பந்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.






      Dinamalar
      Follow us