ADDED : டிச 30, 2025 10:59 PM

துபாய்: இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கோல்கட்டாவில் நடந்தது. இரண்டரை நாளில் (நவ. 14-16) 20 விக்கெட்டுகள் சரிய, இப்போட்டியில் இந்திய அணி (159, 153), 30 ரன்னில் தென் ஆப்ரிக்காவிடம் (189, 93) தோற்றது. தென் ஆப்ரிக்காவின் ஹார்மர் 8 விக்கெட் சாய்த்தார்.
இதனால், ஆடுகளம் குறித்து சர்ச்சை எழுந்தது. இது மோசம் என, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), தகுதி இழப்பு புள்ளி வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
தவிர, சமீபத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மோதிய, ஆஷஸ் தொடரின், மெல்போர்ன் டெஸ்ட் 2 நாளில் முடிந்தது. இந்த ஆடுகளம், திருப்தி தரவில்லை என்ற ஐ.சி.சி., ஒரு தகுதியிழப்பு புள்ளி வழங்கியது.
இதனிடையே கோல்கட்டா போட்டி குறித்து, 'மேட்ச் ரெப்ரி' ரிச்சர்ட்சன் கொடுத்த அறிக்கை அடிப்படையில் ஈடன் கார்டன் ஆடுகளம் திருப்தி அளிப்பதாக ஐ.சி.சி., தெரிவித்துள்ளது. இதனால் தகுதியிழப்பு புள்ளியில் இருந்து தப்பியது.

